Facebook, Facebook Login Account Open, Facebook Sign Up, Facebook Login Welcome To Facebook, Facebook Account, Facebook Logout, Facebook Login Mobile, Facebook Download, Facebook Search

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து முகநூலில் (facebook) பதிவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (28). இவரது நண்பர் மாரிமுத்து. மாரிமுத்து தனது முகநூல் பக்கத்தில் மெர்சல் திரைப்படம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

அதன் கீழ் கமென்ட் பதிவிட்ட திருமுருகன் பிரதமர் நரேந்திர மோடியை ஆபாசமாக அவதூறாக விமர்சித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து திருமுருகனை ஸ்ரீவில்லிப்புத்தூர் டவுன் போலீஸார் இன்று (திங்கள்கிழமை) காலை கைது செய்தனர்.