அ.தி.மு.க இரு அணிகள் குறித்து முதல்-அமைஅச்சர் எடப்பாடி பழனிசாமி
மற்றும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக செய்தியாளர்களிடம் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம்

இருவரும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அணிகள் இணைப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் முடியாமல் இழுத்துக்கொண்டே சென்றது.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்த அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அங்கிருந்து எந்த வித சாதகமான பதிலும் வராத நிலையில், இரவு 8.45 மணி அளவில் ஒவ்வொரு அமைச்சராக அங்கிருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கினார்கள்.

பதவி சண்டை

ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல தொடங்கினார்கள். இதனால், அ.தி.மு.க. இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.