தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் சூழல் எங்களால் உருவாகாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதன் முதல்கட்டமாக கடந்த 5ம் தேதி காஞ்சிபுரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். அங்கு நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு தற்போது சேலத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வெளியானது அஜித் #விவேகம் திரைப்பட டீசர்

தர்மயுத்தம் வெற்றியை நோக்கி பயணிக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய குறிக்கோள். ஆனால், தமிழகத்தில் எங்களால் ஆட்சி கலையும் சூழல் நிச்சயமாக உருவாகாது. ஆட்சி கலைவதற்கு எடப்பாடி அணியினரே காரணமாக அமைந்து விடுவார்கள். திமுவின் அனைத்து சதிகளையும் தகர்த்தெறிந்து அதிமுகவை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. தற்போது தலைமை செயலகம் செயலிழந்துவிட்டது.

ஜெயலலிதா இருந்திருந்தால், கியா மோட்டார்ஸ் வேறு மாநிலத்திற்கு சென்றிருக்காது. தற்போது தமிழக அமைச்சர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்க தமிழக முதல்வர் தவறிவிட்டார் என்று பேசியுள்ளார். இந்த சுற்றுப்பயணம் இந்த மாதம் 31ம் தேதி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.