நீர்வழிச் சாலை திட்டம் கொண்டுவர வேண்டும்: வாசன்த. மிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஒட்டு மொத்த தமிழக மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக விவசாயத் தொழிலுக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.

விஜயகாந்த் நிலைதான் ஓபிஎஸ்சுக்கும் வரும்: அமைச்சர் சீனிவாசன்

நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே போகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும் தமிழகத்தில் வருடம் தோறும் சராசரியாக 177 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது என பொதுப்பணித்துறையின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

சென்ற ஆண்டில் வெள்ளம் ஏற்பட்ட போது மட்டும் மதுராந்தகம், பாலாறு, வைகை ஆகியவற்றிலிருந்து சுமார் 40 நாட்கள் வரை தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்று கலந்துள்ளது. அதே போல வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் கோதாவரி ஆற்றிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவ்வாறு வெள்ளம் ஏற்படும் போது வெளியேறும் நீரை தேக்கி வைப்பதற்கும், தேவையான பகுதிகளுக்கு தேவையான நேரம் தண்ணீர் கொடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதே தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டம்.

இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டத்தை ஆரம்பித்தால் சுமார் 4 வருடத்தில் முடிக்க முடியும். இத்திட்டத்தினால் கிடைக்கும் வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய். நீர்வழிச் சாலை திட்டத்தினை செயல்படுத்தும் போது நிலத்தடி நீர்மட்டம் உயரும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும், சுமார் ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.