‘பாகுபலி 2’ டீஸர் செய்துள்ள சாதனையை, ‘விவேகம்’ டீஸரை வைத்து முறியடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு தனது பிறந்த நாளை படக்குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித். மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். மே 11ம் தேதி ‘விவேகம்’ டீஸர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் யூ-டியூப் இணையத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தின் டீஸர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. இதனை முறியடிக்கும் நோக்கில் அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அஜித் ரசிகர்கள் தங்களுடைய ட்விட்டர் கணக்குகளில் விதிகள் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவை

“* டீஸரை பதிவிறக்கம் செய்யாதீர்கள். பதவிறக்கம் செய்து அதை ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் பதிவிடாதீர்கள்.

* டீஸரின் அதிகாரபூர்வ லிங்க்கை ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் ஷேர் செய்யுங்கள்.

* ‘பாகுபலி 2’, ‘கபாலி’ மற்றும் ‘தெறி’ ஆகிய பட டீஸர்களின் பார்வைகள், லைக்குகள் ஆகிய சாதனைகளை நாம் முறியடிக்க வேண்டும்.