மதுரை: அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து அவதூறாக பேசியதாக தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி நீதிமன்றங்களில் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்திற்கு எதிராக அரசு வழக்கறிஞர் புகார் செய்தார்.

விஜயகாந்த், ‘அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பேச்சு சுதந்திரத்திற்குட்பட்டு பேசினேன். அரசியல் உள்நோக்கில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர்,”மூத்த வழக்கறிஞர் ஆஜராகவும், வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு நகல்கலை தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்க வேண்டும்,” என்றார். நீதிபதி செப்., 8 க்கு ஒத்திவைத்தார்.