விஜயகாந்த் நிலைமைதான் ஓபிஎஸ்.,சுக்கும் வரும் என்று சேலத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் நடந்த வனத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘தமிழகத்தை பொறுத்தவரை  பொய் புகார்கள் எழுந்தால், அது குறித்து முழுமையான விசாரணை நடத்திய பின்னரே, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பொய் புகார் அளிப்பவர்கள் பயந்து போய் உள்ளனர். எங்களுக்கு எதிராக உள்ளவர்கள், இரட்டை இலையை முடக்க நினைத்தார்கள். அதனை மீட்டெடுப்போம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது அமைச்சரவையில் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்’’ என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த், 10 சதவீதம் வாக்குகளை வைத்திருந்தார். தற்போது அவரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அதே நிலைதான் ஓபிஎஸ்சுக்கும் ஏற்படும். அவரிடம் 10 பேர்தான் உள்ளனர்.

ஆனால் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட எங்களிடம் 95 சதவீத நிர்வாகிகள் இருக்கின்றனர். யார் பேச்சை கேட்டுக்கொண்டு அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள் என தெரியவில்லை. இல்லாத ஒன்றை நினைத்து கனவு கண்டு வருகின்றனர்.  அவர்களிடம் உள்ள சிலர், வேண்டுமென்றே திட்டமிட்டு இரு
அணிகளும் இணைய முட்டுக்கட்டை போடுகின்றனர்