தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் வரும் 23-ம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதியும், உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதியும் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விழுப்புரம் அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த், பிரேம லதா, வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகிய 4 பேரும், உயர் நீதிமன்றத் தில் முறையிட்டு இவ்வழக்கில் ஆஜராக விலக்கு பெற்றனர்.

மொத்தமாக அவதூறு வழக்கு களில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற விஜயகாந்த் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அங்கு இந்த வழக்குகளில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் விழுப்புரம் நீதி மன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு தொடர்பாக, விசார ணைக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டிருந்தார். இதன்படி பார்த்தசாரதி, வெங்கடேசன் மட்டுமே ஆஜராகினர்.

வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற் றுள்ளது குறித்த ஆவணங்களின் நகலை விஜயகாந்த், பிரேமலதா தரப்பினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி வழங்க வேண் டும் அல்லது இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரி வித்து, வழக்கின் விசாரணையை, செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.