Two leaves symbol, Two leaves, Aiadmk

இரட்டை இலை சின்னம்வி வகாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணியினரிடம் தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதிகட்ட விசாரணை. விசாரணைக்கு பின்னர்  இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதை தொடர்ந்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இதை தொடர்ந்து கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.  இதையடுத்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓபன்னீர் செல்வமும் ஓரணியில் இணைந்தனர். இதையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி தீர்ப்பை அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணைக்கு பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.