திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல், முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான்கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

நடிகர் கமல் மீது வழக்குபதியக்கோரி கோர்ட்டில் மனு

இந்நிகழ்ச்சிக்குண்டான டீசரை இன்று தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் காந்த கண்களை வைத்தே அந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான காரணம் குறித்து கமல் சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா வைவிட டி.வி. மூலம் அதிகமான மக்களை சென்றடைய முடியும். அதே நேரத்தில் பணமும் எனக்கு முக்கியம். இந்த துறையில் நான் இருப்பது பணத்துக்காகத்தான். படங்களில் காசு வாங்காமல் நான் சும்மா நடிப்பதில்லை.

படத்தை போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உற்சாகமாக இருக்கிறது. பணம், அதிகமான மக்களிடம் சென்று சேரும் வழி இது.