திருச்சி: உள்ளூர் தொலைக்காட்சியில் ‘பாகுபலி2’ படத்தை ஒளிபரப்பி தலைமறைவான டிவி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாகுபலி வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையிலும் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை. ஆன்லைனில் படம் வெளியானாலும் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ளூர் தொலைக்காட்சியில் அனுமதியின்றி படம் திரையிடப்படுவது அதிகரித்துள்ளது.

திருச்சியில் உள்ள கிங் என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் ‘பாகுபலி’ படம் ஒளிபரப்பானது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு கேபிள் ஆபரேட்டரை கைது செய்ததோடு, அவர் வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் சேனல் ஒளிபரப்புச் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் வாசிம் ராஜா தலைமறைவாகிவிட்டார். அவர் மீது கேபிள் தொலைக்காட்சி பதிவுச்சட்டம் 1995, பதிப்புரிமைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.