போலீஸ் வேலைக்கு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில், 56 மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது. சுமார் 42 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 11.20 மணிக்கு தேர்வு முடிவடைந்துவிடும். காலை 9 மணியில் இருந்து தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சென்னையில் நடக்கும் தேர்வு கமிட்டிக்கு துணை கமி‌ஷனர் ராதிகா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.