எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளவர்களை விட தங்கள் அணியில் அதிகமான இளைஞர்கள் உள்ளதாகவும், தாங்கள் முதியவர்கள் அல்ல எனவும், முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்தவருமான பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். அணி என்பது ஓர் முதியோர் இல்லம் என, அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறிய கருத்திற்கு பதிலளித்த பாண்டியராஜன், தங்கள் அணியில் அதிகளவிலான இளைஞர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.