மே 12-ம் தேதி காலை 10 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். +2 தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.
+2 தேர்வு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும். பிறந்த தேதி,மதிப்பெண் விவரங்களை அளித்து தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழை பெறலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 17ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் 15-ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். 2-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 12 முதல் 15-ம் தேதி வரை தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.