தமிழகம் முழுவதும் திமுக இன்று உண்ணாவிரத போராட்டம்

சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திருச்சி மாவட்டம் தொன்னூர் உழவர்சந்தையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற அனுமதியின்றி சசியை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது: ஆச்சார்யா

எடப்பாடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிக்கப்பட்டது. பல உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின், மெரினாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Mk Stalin, Mk Stalin Contact Number, Durga Stalin, Mk Alagiri, Mk Stalin Blood Cancer, Senthamarai Stalin, M K Stalin Daughter, Mk Stalin Family, Mk Stalin Images
தமிழகம் முழுவதும் திமுக இன்று உண்ணாவிரத போராட்டம்

இந்நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனைக்காக நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திமுக அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீக் கட்சியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.