கருணாநிதியின் 60 ஆண்டு வைர விழா, 94–ம் பிறந்த நாள் விழா என இரு விழாக்களையும் இணைத்து தலைமை கழகத்தின் சார்பில் மிகப்பெரிய அளவில் விழா எடுக்கப்படுகிறது. இவ்விழா நம் எண்ணப்படி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் 3–ந் தேதி அன்று மாலை 5 மணியளவில் மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பல மாநில முதல்–மந்திரிகள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், ஏழை–எளிய மக்களுக்கு, புடவைகள், வேட்டிகள், இளைஞர்களுக்கு பேண்ட், சட்டைகள் வழங்கப்படும். பள்ளி மாணவ–மாணவிகளுக்கு புத்தகங்கள், பென்சில், பேனா, பேக் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும்.

மாவட்ட பகுதிகளில், மிகவும் பின்தங்கிய மக்கள் வாழ்கிற பகுதியில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் ஆஸ்பத்திரியில் அன்று (ஜூன் 3–ந் தேதி) பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.