தமிழக அரசை பாஜக நேரடியாகவே இயக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ”தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். புறக்கடை பக்கமாக இருந்து தமிழக அரசை பாஜக இயக்காது. முன்பக்கமாக அதாவது நேரடியாகவே தமிழக அரசை இயக்குவோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உறுதி படத் கூறினர்

ரசியல் சூழ்நிலையை பாஜக பயன்படுத்துகிறது என்று யாராவது குற்றம்சாட்டுவர்களேயானால் அவர்கள் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சி இருப்பதே தங்களுக்கு சாதகமாக சூழல் வரும்போது அதைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதற்குத்தான்” என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.