சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். அரசியலுக்காக என் வீடு அலுவலகத்தில் சி.பி.ஐ.சோதனை நடத்தப்பட்டது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரிதியாகவும் இந்த சவாலை ஏதிர்கொள்வேன். “” என்றார்

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடுகள், டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அவருக்கு சொந்தமான மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அனுமதியளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.