திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குளிர்பான ஆலைக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புக்கு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அந்த நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களும் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்கள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.