அரசு திரைப்பட கல்லூரியில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் இன்றைய தினம் திரைப்பட பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகமாகிவிட்டது. பாரதி ராஜா திரைப்பட கல்லூரி, தனஞ்செயனின் BOFTA திரைப்பட பயிற்சி நிறுவனம், பிரசாத் பயிற்சி நிறுவனம், பாலுமகேந்திரா பயிற்சி பட்டறை உள்பட 10க்கும் மேற்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. இவை லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன.

ஜூலை 10-ம் தேதி மல்லையா ஆஜராவதை உறுதி செய்க: உச்ச நீதிமன்றம்

குறைந்த செலவில் திரைப்படம் குறித்து படிக்க இருக்கும் ஒரே வாய்ப்பு தரமணி அரசு திரைப்படக் கல்லூரிதான். ரஜினி, நாசர், பி.சி.ஸ்ரீராம், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் இங்கிருந்து வந்தவர்கள்தான். இந்த திரைப்பட கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியட், இயக்கம், திரைக்கதை அமைப்பு, எடிட்டிங், அனிமேஷன், விஷூவல் எபெக்ட் ஆகிய பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.