தமிழகம் நிலையற்ற ஆட்சியால் பாதிப்பு: ஸ்டாலின்

ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் இன்று நடந்தது. தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், நிலையற்ற தன்மையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிமுகவில் பதவிப்போட்டி நிலவுகிறது. சசிகலாவின் புகாருக்கு பதிலளிக்க முடியாது.

அங்கு பதவிவெறி போட்டி நடக்கிறது.கவர்னர் இனியும் நேரத்தை வீணடிக்காமல், நிலையான ஆட்சி அமைவதற்கு உடனடியாக நடவடிக்கை ஏடுக்க வேண்டும். கூவத்துாரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்துள்ளனர். தானே முதலமைச்சர் ஆக வேண்டும் என பன்னீர் செல்வம் துடிக்கிறார். தி.மு.க.,வை பொறுத்தவரை அதிமுக எதிரிகட்சி தான்.

யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்லாம். குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.