தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்குகள் தொடர்பான பட்டியல் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ”நீங்கள் பொது வாழ்வில் இருக்கும் ஒருநபர். அதனால் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கொள்கை விமர்சனங்கள் அவதூறு பேச்சுக்கள் ஆகாது. தமிழகத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முடியாது. அவதுாறு வழக்கு சட்டம், தமிழகத்தில் தான் அதிக அளவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

பின், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.