திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று, அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, திமுக.,வின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் மு.க.அழகிரி. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மூத்த அரசியல் வாரிசான இவர், சகோதரர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட வாரிசு யுத்தம் காரணமாக, படிப்படியாக, கட்சியில் இருந்தும், பொது வாழ்வில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

ஜூன் 3 ல் தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

தற்போது, மதுரையில் வசித்து வரும் முக அழகிரி அவ்வப்போது, சென்னை வந்து, தந்தை கருணாநிதி மற்றும் தாய் தயாளு அம்மாளை சந்தித்துப் பேசிவிட்டு செல்வார். எனினும், அரசியல் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால், மழுப்பியவாறே சென்றுவிடுவார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, வைர விழா நடத்தும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஒருவேளை, இந்த நிகழ்ச்சியில் இருந்து, மு.க.அழகிரி மீண்டும் அரசியலை முழுவீச்சில் தொடங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.