தமிழகத்தில், ஜூன், 1 முதல் அமலுக்கு வருகிறது. ‘ஆதார்’ அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூன், 1 முதல், மானிய விலையில் உரங்கள் கிடைக்கும். தமிழகத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, தனியார் மூலமாகவும், உரங்கள் வினியோகம் நடக்கிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்

இதில், முறைகேடுகளை தடுக்க, மானிய உரம் வழங்க, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.

ஆதார் கார்டு , Farmer, Farmer Essay, Farmer News, Indian Farmer, Farming In India, Farmer Death, Importance Of A Farmer, Farmer News In English, Farmer In Tamil Nadu,
‘ஆதார்’ அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூன், 1 முதல், மானிய விலையில் உரங்கள்

இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாயிகள் என்ற பெயரில், மானிய விலையில் உரங்களை பெறும் பலர், அதை பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட, பல நிறுவனங்களுக்கு விற்கின்றனர்.இதனால், மத்திய அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுவதோடு, தகுதியான விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில்லை.

இதையடுத்து, ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரங்களை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, கையடக்க எலக்ட்ரானிக் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. ஜூன், ௧ முதல், இந்த கருவிகளில், விவசாயிகளின் ஆதார் அட்டை எண் அல்லது கைரேகையை பதிவு செய்த பின்னே, உரங்கள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.