உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது என சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.விஆச்சார்யா தெரிவித்துள்ளார். சிறைச்சாலை விதிகளின் படி கைதி ஒருவரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட சிறையின் உயரதிகாரிகள் முடிவெடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும்? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

எனினும் சசிகலா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இது பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்ற இயலாது என அவர் கூறியுள்ளார்.

சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம் என வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பி்டத்தக்கது.