நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கோரி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிக்கப்பட்டுள்ளன என மருத்துவ அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிக்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதனை தொடர்ந்து விரிவான விசாரணையை வரும் 27ந்தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.