கோவை: அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புவதாக தமிழக முதல் அமைச்சர் பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி பேச்சு:

நல்லாட்சி தொடர பிரிந்து சென்றவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். 10 ஆண்டுகள் கழித்து தமிழகம் ஒரு விஞ்ஞான மாநிலமாக மாறி இருக்கும்.

அதிமுக ஆட்சி கவிழும் என சிலர் பகல் கனவு காணுகிறார்கள், அது நடக்காது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன்  வாரிசு இல்லாத எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவுக்கும் தொண்டர்கள் தான் வாரிசு. வழிமாறி சென்றவர்கள் மீண்டும் நல்வழிக்கு திரும்ப வேண்டும்; ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.