தி.மு.க.,வின் சதிகளை முறியடித்து அதிமுகவை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பன்னீர் செல்வம் கூறினார்.

தமிழகத்தில் எங்களால் ஆட்சி கலையாது: ஓ.பன்னீர்செல்வம்

சேலத்தில் நடைபெற்ற கட்சிசெயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் மக்களுக்காக பல நலத்திட்டங்களை அர்ப்பணித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலரும் . தர்மயுத்தம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தை சி.பி.ஐ,விசாரிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை என கூறினார்.

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. ஆட்சி கலைக்கப்படும் சூழல் எங்களால் உருவாகாது. 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துகொண்டு ஆட்சியை தத்தி தத்தி நடத்தி விடலாம் என கருதுகின்றனர். முதல்வர் பழனிசாமி அமைச்சர்களை கட்டுப்படுத்த தவறிவட்டார்.

எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்து வெளியேறி வரும் போது அவருடன் ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே இருந்தார். ஜெயலலிதா இருந்திருந்தால் கியா மோட்டார்ஸ் வெளி மாநிலங்களுக்கு சென்றிருக்காது .சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நிலையை முதல்வர் தடுக்கவில்லை . தவறான பாதையில் செல்பவர்கள் எங்கள் பக்கம் வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் .என பன்னீர் செல்வம் கூறினார்.