ஆயிரம் பன்னீர்செல்வத்தை பார்த்திருக்கிறேன் சசிகலா

போயஸ் கார்டன் இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த அன்றே அதிமுகவை பிரிக்க நினைத்தார்கள். ஜெயலலிதா இறந்த அன்று இரவே பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என கூறினேன். ஏற்கனவே இருந்த அமைச்சரவையையே தொடர சொன்னேன். நீங்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என எல்லோரும் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் ஜெயலலிதா இறந்த துக்கத்தில் முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை.

நான் நினைத்திருந்தால் எப்போதோ முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், அந்த நினைப்பு ஒரு நொடி கூட எனக்கு எழவில்லை. உண்மை நிலையை தொண்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.

அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர் இறந்த போது அவர் இறுதி ஊர்வல வண்டியில் ஏற விடாமல் ஜெயலலிதாவைத் தடுத்து தள்ளிவிட்டபோது, அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரசியலை விட்டே ஜெயலலிதா விலகலாம் என்று நினைத்தார். அதை பலமுறை என்னிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். நான்தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அரசியலில் தொடர வைத்தேன்.

எம்ஜிஆரை நீக்கிய திமுகவிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டசபையில் சிரித்து பேசியதாக எம்.எல்.ஏ.க்கள் அப்போதே புகார் அளித்தார்கள்.அதிமுக அரசு அமைய உயிரையும் விட தயார்.நாங்கள் இதுபோன்ற 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள்.எத்தனை ஆண்கள் எதிர்த்தாலும் ஒரு பெண்ணாக எதிர்த்து நிற்பேன்.