பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள் – சசிகலா

சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூ ருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர். அதன்பிறகு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சசிகலா, இளவரசியை சந்தித்துப் பேசினர்.

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. கர்நாடக சிறைத்துறை விதிமுறை களை மீறி, இத்தகைய சந்திப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனால் கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்தியநாரயண ராவ், சசிகலா தரப்பை சந்திக்க பார்வையாளர்களை அடிக்கடி அனுமதிக்க‌க் கூடாது என சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே தமிழக முதல்வ ராக பொறுப்பேற்ற‌ எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்திக்க அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறைக்கு நேற்று முன்தினம் மனு அளித்தனர்.