விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி பயிர் இழப்பு வறட்சி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச்செயலகத்தில் நடந்த ஆய்வுக்கு பின் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக-வில் இருந்து பழனிச்சாமி நீக்கம்: மதுசூதனன்

அதன்படி மானாவரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3000 நிவாரணமும் பாதிக்கப்பட்ட நெற்பயிர், இதர பாசனத்துக்கு ஏக்கருக்கு ரூ.5,465 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதேபோல் நீண்டகால பயிருக்கு ஏக்கருக்கு ரூ.7287 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 32,30,191விவசாயிகளுக்கு இடுபொருள் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு ரூ. 4800 முதல் ரூ.69,000 வரை ஈட்டுத் தொகை பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பட்டுப்புழு வளர்ப்பு – ஏக்கருக்கு ரூ.2428 முதல் ரூ.3000 வரை நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.