சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை மீது பேசுவதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்க மறுத்தார்.

இதனைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து தங்கள் கண்டத்தைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து, சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”கடந்தாண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று, தடைசெய்யப்பட்டு இருக்கக்கூடிய குட்கா உள்ளிட்ட போதைப் பவுடர் விற்பனை செய்த மாதவராவ் என்பவரின் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சோதனையில் சில டைரிகளும், கணக்குப் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என விரிவாக பட்டியலிடப்பட்டு இருக்கிறது