அதிமுக.வில் இருந்து பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம்

அதிமுக..வில் இருந்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அங்கு சசிகலா, தன்னை ஆதரிக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சசிகலா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் செல்லாது என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் தனது கையெழுத்து இன்றி வங்கியில் பணம் எடுக்க கூடாது என்று வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.