நேற்று இரவு முதல் சமூகவலைத் தளங்களில் தீயாக பற்றி எரிகிறது அந்த செய்தி.

அதாவது கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமானது என்கிறார்கள்.

அதாவது எந்திரன் படம் துவங்கிய போது அந்த இடம் ஸ்டார் ஹோட்டல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிஜேபி பிரமுகருக்கு சொந்தமானது என்றும் அதை விற்று விட்டு அவர் பாரின் போய் செட்டில் ஆக இருந்தாராம்.

இது அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் சகோதரர்களுக்கு தெரியவர அப்படியே விலை பேசி ரஜினி சம்பளத்திற்கு பதிலாக அவர் பெயருக்கு முடித்துக் கொடுத்தார்கள் என்கிறது அந்த வலைத்தளச் செய்தி.

அப்போதே இந்த செய்தி பற்றி தகவல் கசிந்தது. காரணம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அங்கு அதிகமாக செல்வார்கள் என்கிறார்கள்.

ஒய்வு எடுப்பதற்கும் கதை விவாதம் செய்வதற்கும் குடும்பத்தோடு வந்து ஒய்வு எடுப்பதற்கும் கோல்டன் ரிசார்ட்டுக்கு படை எடுப்பார்கள் என்கிறார்கள்.