ரஜினி இன்று சென்னையில் ரசிகர்களை சந்தித்தார். இன்றைய நிகழ்வின் போது ரசிகர்களிடம் மனம் திறந்து எதுவும் பேசவில்லை. ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சிறிது நேரம் ஒய்வெடுக்க கீழே சென்றுவிட்டார். சுமார் 10 நிமிடங்கள் கழித்து மேடையேறியவுடன், புகைப்படம் எடுக்கும் நிகழ்வு தொடங்கியது.

ரஜினியின் அரசியல் பேச்சால் உச்சத்தில் ரசிகர்கள்

இன்றைய நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “ரசிகர்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். அரசியலில் நுழைவது பற்றி எனது கருத்தை, ஏற்கெனவே ரசிகர்களின் முன்னிலையில் தெரிவித்துவிட்டேன். தற்போதுள்ள நிலையில் மேலும், அதைப் பற்றி பேச விரும்பவில்லை.

இந்த ரசிகர்கள் சந்திப்பு முடிந்தவுடன், அடுத்து 15 மாவட்டங்கள் உள்ளன. அடுத்ததாக நேரம் கிடைக்கும் போது, இதே போன்று திட்டமிட்டு சந்திக்கும் எண்ணம் உள்ளது. மேலும், அரசியல் குறித்து எதையும் கேட்காதீர்கள்” என்று தெரிவித்தார்.