Pondicherry Bus Strike, Pondicherry Bandh Tomorrow, Pondicherry News Today In Tamil, Is Tomorrow A Holiday In Pondicherry, Pondicherry News Live, Flash News Puducherry, Pondicherry Strike Today, Daily Thanthi Puducherry, Dinamalar Pondicherry News Today

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனால் அரசு பேருந்துகள் ஓடவில்லை.

புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 650–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக நிதி பற்றாக்குறையால் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.  நிரந்தர ஊழியர்கள் சிலருக்கு மட்டும் சம்பளம் போடப்பட்டுள்ளது.  இந்த மாதம் 18 தேதி ஆகியும் சம்பளம் வழங்காத நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஊதியம் வழங்க கோரி நேற்று 2வது நாளாக 200 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று 3வது நாளாக தொடருகிறது.