5.30-க்கு ஆளுநரை சந்திக்கிறார் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசியலில் முக்கியத் திருப்பமாக கருதப்படும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது.

அதிமுக புதிய சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

இதனையடுத்து கூவத்தூரில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க பழனிச்சாமி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.

இந்நி்லையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை 5.30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உட்பட 12 பேருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்திக்க கூவத்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.