கோவை: கட்சியில் இணைய ஒ.பி.ஸ் அணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு. மேட்டுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஜெயலலிதா 69-வது பிறந்த நாள் விழா இன்று காலை நடந்தது. விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஜெயலலிதா மரணம் நீதி விசாரணைக்கு மறுப்பது ஏன்? ஒபிஸ்

இங்கே வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் ( ஓ.பி.எஸ். அணி ஓ.கே.சின்னராஜ்) ஜெயலலிதாவின் செல்வாக்கினால் தான் வெற்றி பெற்றார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு தர வேண்டும்

அப்போது அவர் பேசியதாவது:-

மேட்டுப்பாளையத்தில் ரூ.224 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கப் பட உள்ளது. இதில் நிலத்துக்காக மட்டும் ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அறிவித்தார். தற்போது இத்திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறை வேற்றப்படும்.

மக்கள் என் பக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்? எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பின்னால் மக்கள் இருக்கிறார்கள்.அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம்மாறி திரும்பி வரவேண்டும்.