தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பேரவையில் நாளை நடைபெறுகிறது. இந்த சூழலில் தலைமை செயலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினா்.

ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன், செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணி சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தேர்வு முறையை ரகசியமாக நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம்: ஸ்டாலின்

மேலும் இந்த கோரிக்கையை வலிறுத்தி மனு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் அணி, சபாநாயகர் தனபாலிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரை சந்தித்து பேசிய பின் செய்தியாளரிடம் பேசிய பாண்டியராஜன், நாளை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.