ஸ்டாலினின் ஊதுகுழலாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்றும், ஆட்சியை கலைக்கவே திட்டமிடுகிறார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழறிஞர் கால்டுவெல்லின் 203-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சந்தப்பவாதிகள்.

ஜெயலலிதாவின் ஆட்சி தொடரவேண்டும் என்பவர்களே உண்மையான அதிமுகவினர்.

ஓபிஎஸ் ஸ்டாலினின் ஊதுகுழலாக செயல்படுகிறார். அதிமுக ஆட்சியை கலைக்கவே அவர் திட்டமிடுகிறார். அவரகளின் திட்டம் பலிக்காது. 2021 வரை அதிமுகவின் ஆட்சி தொடரும்.

ஓபிஎஸ் அணியினர் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதுகுறித்து பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.