தமிழக அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ’’சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை விரைவில் திறக்கப்படும் என்றும். அது சட்டமன்றத்தையே பெருமைப்படுத்தும் விஷயமாகும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா சமாதியில் மக்கள் கூட்டம்

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு தினந்தோறும் சுமார் 30,000 பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் சுமார் 50,000 வந்துசெல்கின்றனர். மத்தியில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் செல்வாக்கை எதிர்க் கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அணி அணியாகச் சென்று முதல்வரிடம் அமைச்சர் பதவி கோரியதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று முதல்வர் தெரிவித்தார்.