சட்டசபை இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மறைவு செய்தியை சபாநாயகர் தனபால் வருத்தத்துடன் தெரிவித்தார்.

1989 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2001 வரை 2 முறை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் 1996 முதல் 2001 வரை அமைச்சராகவும் இருந்து பணி யாற்றியவர் என்றும் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

முன்னாள் உறுப்பினரான சற்குணபாண்டியனின் மறைவால் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கூறினார். சற்குணபாண்டியன் மறைவயொட்டி உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.