ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவா ளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத் தார். இதன்படி முதல்- அமைச்சராக பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபால் நாளை (சனிக்கிழமை) சட்ட சபையை கூட்டியுள்ளார். நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடும் என்று பேரவை செயலாளர் ஜமாலு தீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மே மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

தமிழகத்தில் நிலவும் பரப்பப்பான அரசியல் சூழ்நிலையில்  மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ்  நான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் வாக்களிப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என கூறி உள்ளார்.  கட்சி தாவல் தடை சட்டத்தால் தனது பதவி பறிபோனாலும் அது பற்றி கவலை இல்லை என கூறி உள்ளார். இதனால்  எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் இனி 123 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.