முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முதன் முதலாக ராசிபுரம்  வந்தார். அவருக்கு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

இன்று மாலை ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முதன் முதலாக என்னை வெற்றி பெற செய்து அரசியலுக்கு அறிமுகப் படுத்திய ராசிபுரம் தொகுதி மக்களுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி ஒரு குடும்பத்தின் கைக்கு செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் ஓ. பன்னீர்செல்வம் பின்னால் நிற்கின்றோம். இப்போது சசிகலாவின் ஆட்சி நடந்து வருகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி பினாமி முதல் அமைச்சர் ஆக உள்ளார்.

சசிகலாவின் காலில் விழும் ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான சரோஜாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி தேவையா? ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான சரோஜா ராசிபுரத்தில் இருக்காமல்  சங்ககிரிக்கு சென்றுவிடுவது ஏன்? அதே போல் ஏற்கனவே ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சபாநாயகர் தனபால் தொகுதி பக்கம் வந்திருப்பாரா? இங்கு ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட அருந்ததியர்கள், ஆதிதிராவிடர் மக்கள் வந்திருக்கிறீர்கள். அவர் உங்களுக்காக எதாவது செய்தாரா? சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் என்னென்ன செய்தார்கள் என்ற ஆவணம் என்னிடம் உள்ளது. அதை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கூறுவேன்.

டெல்லி ஏடிஎம்-யில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்

சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்னென்ன செய்தார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? கூவத்தூர் ரிசார்ட்சில் டான்ஸ் ஆடுவதற்கும், ஜாலியாக சைக்கிள் ஓட்டுவதற்குமா சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்? என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அவர்கள் அடைந்த பலனை விரைவில் அறிவிப்பேன், ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மத்தை வெளிக்கொணர வேண்டும், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.