இந்தியா முழுவதும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக (பாஜக) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் அறிக்கை

மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இந்தியா முழுவதும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக (பாஜக) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த தடை மூலம் மதம், தனிமனிதச் சுதந்திரம், மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசே வெளியிடுவது நல்லாட்சியின் இலக்கணம் அல்ல என்றும் பாஜக அரசின் மூன்று ஆண்டுகால தோல்வியை திசை திருப்பும் முயற்சி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.