மு.க. ஸ்டாலின் ஒரு பசு கொலையாளி: தமிழிசை

சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசால் விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாட்டிறைச்சிக்குத் தடையை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

மாட்டுகறி போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான பசுக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் ஒரு பசு கொலையாளி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடையை விதித்தது

மாடுகளை வாங்க, விற்க, உண்ண தடை இல்லை என்றும், இளம் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்கவுமே, இந்த சட்டம் தடுப்பதாகவும் தெரிவித்தார்.

கால்நடை சந்தையை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை ஸ்டாலின் தவறாக புரிந்துகொண்டாரா என எனக்கு புரியவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.