தமிழகத்தில் வரும் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம், மே 15-ம் தேதிக்கு முன் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என கூறியது. இதனையடுத்து உயர்நீதிமன்றம், வரும் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவுக்கு அவகாசம் அளிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான தடையை நீக்க கோரி மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை நீதிபதிகள் மோகன் ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதிலேயே மாநில தேர்தல் ஆணையம் ஆர்வமாக இருப்பதாக சாடியது.

இதனையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் இதற்கும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தேச தேதியை கூற வேண்டாம். எப்போது தேர்தலை நடத்த முடியும் மற்றும் சரியான என தெளிவாக கூறும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் தரப்பில் மே 15-ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் தமிழகத்தில் மே 14-க்குள் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.