சென்னை: மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சிரமம் என ஐகோர்ட்டில் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 24ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பாடம் நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் கோரிக்கைப்படி ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை பின்பற்றுவதில் சிரமம் உள்ளது. மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது என்பதே சிரமம் எனக்கூறியது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் கால அவகாசம் கேட்பீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.