இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன். வெற்றி பெறுவேன் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணை முடிவில் எங்கள் தரப்புதான் வெற்றி பெறும். 95 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னம் நிச்சயமாக எங்களுக்குத்தான் ஒதுக்கப்படும். நாளை மறுநாள் இரட்டை இலை சின்னத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய போகி றேன். இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன். வெற்றி பெறுவேன். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஓரிரு நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்”

சிங்கப்பூர் குடியுரிமை குறித்த கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், நானும் இந்த மண்ணின் மைந்தன்தான்; நானென்ன ஆப்கானிஸ்தானில் இருந்தேனா என்ன என ஆவேசமாக கூறினார்.

மேலும், ஊழலின் ஒட்டுமொத்த உருவமே தி.மு.க.தான்; மு.க.ஸ்டாலின் கூறுவதை பெரிதாக எடுக்கக்கூடாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.