மக்களின் கருத்தை எம்.எல்.ஏ.க்கள் கேட்டிருக்க வேண்டும்: திருப்பூர் எம்.பி.

வாக்களி்த்தவர்களின் கருத்துக்களை கேட்டிருந்தால் அனைவரும் சரியான முடிவை எடுத்திருப்பார்கள் என்று திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பினாமி அரசை வீழ்த்தும் வரை அறப்போராட்டம்: மு.க.ஸ்டாலின்

வாக்களித்த மக்களின் கருத்துக்களை கேட்டும், மனசாட்சியின் அடிப்படையிலும் முடிவெடுத்து ஒ.பி.எஸ் அணியை ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையென்றார் அவர்.

மற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களிடம் கருத்து கேட்டிருந்தால் நல்ல முடிவை எடுத்திருப்பார்கள் என்றும் சத்தியபாமா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிலைமை வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சத்தியபாமா கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் பன்னீர் செல்வம் அணியை ஆதரிக்கும் எம்.பி.க்களில் திருப்பூர் தொகுதி சத்தியபாமாவும் ஒருவர் ஆவார்.